உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தோல்வியில் முடிந்த பலவருட சினிமா பயணம் ; கைக்கொடுத்த சீரியல் : பாக்கியலெட்சுமி சுசித்ராவின் லைப் ஸ்டோரி

தோல்வியில் முடிந்த பலவருட சினிமா பயணம் ; கைக்கொடுத்த சீரியல் : பாக்கியலெட்சுமி சுசித்ராவின் லைப் ஸ்டோரி

சினிமா மற்றும் சின்னத்திரையில் பல வருடங்களாக நடித்து வரும் சுசித்ரா, 14 வயதிலேயே கன்னட சினிமாவில் அறிமுகாமாகி பல படங்களில் நடித்துள்ளார். தமிழிலும் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான சைவம் படத்தில் நடித்திருந்தார். அதுமட்டுமில்லாமல் தமிழ் சின்னத்திரையிலும் 2008ம் ஆண்டிலேயே 'நாணல்' என்ற தொடரின் மூலம் அறிமுகமாகியிருந்தார். ஆனால், அப்போதெல்லாம் இவர் இந்த அளவுக்கு பிரபலமாகவில்லை. சினிமாவிலும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இந்நிலையில், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலெட்சுமி' தொடர் சுசித்ராவுக்கு செலிபிரேட்டி அந்தஸ்தை கொடுத்தது. மேலும், அந்த தொடரின் 300வது எபிசோடை வெற்றிவிழாவாக கொண்டாடிய நிகழ்ச்சியில் பலரும் சுசித்ராவை தங்கள் ரோல் மாடலாக நினைத்து தங்களது வாழ்வில் சாதித்ததை பதிவு செய்திருந்தனர். இந்த அளவுக்கு மக்கள் மனதில் சுசித்ரா தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தாலும், அவரே இப்போது தான் தன் வீடு வாங்கும் கனவை நனவாக்கியுள்ளார்.

சென்னையில் புதிதாக வீடு வாங்கியுள்ள சுசித்ரா அண்மையில் கிரகப்பிரவேச நிகழ்வை நடத்தியிருந்தார். இதனையடுத்து சுசித்ராவின் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். பலவருடங்களாக திரைத்துறையில் பயணித்தாலும் சுசித்ராவின் வாழ்வில் இப்போது தான் வசந்தகாலம் ஆரம்பமாகியுள்ளது என்பதால், இந்த வெற்றி அவருக்கு என்றென்றும் நிலைக்க வேண்டும் எனவும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !