லவ் டுடே பாணியில் மற்றுமொரு படம்
ADDED : 1011 days ago
ஒரு படம் வெற்றி பெற்றால் அதே பாணியில் படங்கள் வெளிவருவது அடிக்கடி நடக்கும். அந்த வரிசையில் தற்போது வெற்றி பெற்ற லவ் டுடே படத்தின் பாணியில் படங்கள் தயாராகின்றன. அவற்றில் ஒன்று ‛பொய் இன்றி அமையாது உலகு'. இந்த படத்தில் சாக்ஷி அகர்வல், விவேக் பிரசன்னா, டேனி அனி போப் உள்பட பலர் நடிக்கிறார்கள். சக்திவேல் இயக்குகிறார், பிரசாத் ஒளிப்பதிவு செய்கிறார், வசந்த் இசை அமைக்கிறார். ஜெகன் நாராயணன் தயாரிக்கிறார்கள்.
நண்பர்கள் சிலர் ஒரு வீக்கெண்ட் பார்ட்டிக்காக ரெசார்ட்ஸ் ஒன்றில் கூடுகிறார்கள். அப்போது அவர்களுக்குள் ஒரு போட்டி வருகிறது. எல்லோருடைய செல்போன்களை ஒரே இடத்தில் வைக்க வேண்டும். யாருக்கு என்ன போன் வந்தாலும், மெசேஜ் வந்தாலும் அதை எல்லோரும் பார்க்க வேண்டும். இதுதான் அந்த விளையாட்டு. இந்த விளையாட்டு எப்படி வினையாகிறது என்பதுதான் கதை.