மியூசிக் ஆல்பத்தில் யுடியூபர் மதன் கௌரி
ADDED : 1017 days ago
'ஒரு கல்லூரியின் கதை' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான நந்தா பெரியசாமி முதல் படத்தின் வெற்றிக்கு பிறகு மாத்தி யோசி, ஆனந்தம் விளையாடும் வீடு உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கினார். இதையடுத்து வித்தியாசமான கதைக்களத்தில் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார். இதனிடையே டியூபர் மதன் கௌரி நாயகனாக நடிக்க 'தேடி தேடி பாத்தேன்' என்ற பெயரில் ஆல்பம் ஒன்றை இயக்கி உள்ளார்ர். இதை வி.மதியழகன் தயாரித்து வருகிறார். ஆல்பத்தில் ஸ்ரீரிதா ராவ் நாயகியாக நடிக்கிறார். தரண் குமார் இசையில் உருவாகியுள்ள இந்த ஆல்பத்திற்கு கே.ஏ ஒளிப்பதிவு செய்கிறார்.