நானிக்கு ஜோடியாகும் மிருணாள் தாகூர்
ADDED : 1017 days ago
தெலுங்கில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நானி. தமிழில் 'நான் ஈ', 'அடடே சுந்தரா' ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் நடித்து வரும் அவர், தற்போது 'தசரா' என்ற படத்தில் முடித்துள்ளார். பன்மொழி படமாக இந்த படம் வெளியாக உள்ளது.
இதையடுத்து நானி நடிப்பில் உருவாகவுள்ள 30வது படத்தின் அறிவிப்பு புத்தாண்டை முன்னிட்டு வெளியாகியுள்ளது. இதில் 'சீதாராமம்' படத்தின் மூலம் பிரபலமான நடிகை மிருணாள் தாகூர் கதாநாயகியாக நடிக்கிறார். நானி - மிருணாள் தாகூர் இணையும் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
வைர என்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை ஷூர்யுவ் என்பவர் இயக்கவுள்ளார். இந்நிலையில் இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.