தனுஷின் வாத்தி : புதிய அப்டேட் வெளியானது
ADDED : 1017 days ago
கடந்த ஆண்டில் தனுஷ் நடிப்பில் தி க்ரேமேன், மாறன், திருச்சிற்றம்பலம், நானே வருவேன் என நான்கு படங்கள் திரைக்கு வந்தன. இந்த நிலையில் இந்த 2023ம் ஆண்டு தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தனுஷ் நடித்திருக்கும் வாத்தி படம் திரைக்கு வருகிறது . இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், சமீபத்தில் வாத்தி படத்தின் சிங்கிள் பாடல் ஒன்று வெளியானது. வாத்தி படம் பிப்ரவரி 17ல் திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் பிரமாண்டமாக நடைபெற இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. தனுஷ் உடன் சம்யுக்தா மேனன், சமுத்திரக்கனி , சாய் குமார் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள வாத்தி படத்தை வெங்கி அட்லூரி இயக்கி இருக்கிறார்.