'பிரின்ஸ்' பட நஷ்டத்திற்காக இழப்பீடு வழங்கிய சிவகார்த்திகேயன்?
ADDED : 1067 days ago
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி கடந்த தீபாவளிக்கு வெளியான திரைப்படம் பிரின்ஸ். இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கியிருந்தார். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் வெளியான இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ், சுரேஷ் புரொடக்ஷன்ஸ் மற்றும் சாந்தி டாக்கீஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருந்தனர்.
இப்படத்தை தமிழகத்தில் விநியோகஸ்தர் அன்புசெழியன் வெளியிட்டிருந்தார். இப்படம் வெளியாகி தோல்வியை சந்தித்தது. இதனால் வசூலில் பின்னடைவை சந்தித்தது. இந்நிலையில் இந்த படத்தின் நஷ்டத்தை ஈடுகட்டும் விதமாக தனது பங்காக நடிகர் சிவகார்த்திகேயன் 3 கோடி ரூபாய் கொடுத்துள்ளார். அதேநேரம் பிரின்ஸ் படத்தின் தயாரிப்பு நிறுவனம் சார்பில் 3 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் 6 கோடி ரூபாய் நஷ்ட ஈடாக கொடுக்கப்பட்டுள்ளது.