யோகிபாபு நடித்துள்ள 'பொம்மை நாயகி'.. ரிலீஸ் தேதி வெளியீடு
ADDED : 1008 days ago
காமெடி நடிகராக நடித்து வந்த யோகிபாபு, தற்போது கதாநாயகனாக பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் யோகிபாபு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‛பொம்மை 'நாயகி'. பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் தன் மகளுக்காக போராடும் ஒரு தந்தையின் கதை தான் இப்படம். 'சூப்பர் சிங்கர்' புகழ் ஸ்ரீமதி யோகிபாபுவின் மகளாக நடித்துள்ளார். அறிமுக இயக்குனர் ஷான் இயக்கி வருகிறார். சுந்தரமூர்த்தி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தின் இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படம் வருகின்ற பிப்ரவரி 3ம் தேதி வெளியாகும் என புதிய போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.