சிம்பு கதையில் ரஜினியா...
ADDED : 4 minutes ago
கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் ரஜினிகாந்த் அவரது 173வது படத்தில் நடிக்கவுள்ளார் என அறிவிப்பு வெளியானது. ஆனால் ஒரே வாரத்தில் சுந்தர்.சி இந்த படத்தை விட்டு விலகுவதாக அறிவித்திருந்தார். சமீபத்தில் கிடைத்த தகவலின்படி ரஜினி 173வது படத்தை நிதிலன் சுவாமிநாதன் அல்லது ராம்குமார் பாலகிருஷ்ணன் என இருவரில் ஒருவர் இயக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் தற்போது ராம்குமார் பாலகிருஷ்ணன் கூறிய கதை ரஜினியை கவர்ந்துள்ளது என்கிறார்கள். இதனால் இந்த படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவது உறுதியாம். ஏற்கனவே ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருந்த கதையை தான் இப்போது ஒரு சில மாற்றங்கள் செய்து ரஜினிக்கு கூறியுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.