உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம்

ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம்

தமிழில் இந்த ஆண்டு இந்த வாரத்துடன் வெளியாகும் படங்களை சேர்த்தால் 250 படங்கள் வெளியாகி இருக்கும். இதில் வெற்றி விகிதம் மிகக் குறைவாக உள்ளது. குறிப்பாக கடந்த சில மாதங்களில் வெளியான படங்களில் பெரும்பாலான படங்கள் தோல்வி அடைந்துள்ளன. தீபாவளிக்கு வெளியான படங்களில் பைசன் மற்றும் டியூட் வெற்றி பெற்றது. அதற்கு பின் வந்த படங்களில் ஆண்பாவம் பொல்லாதது மட்டுமே லாபம் கொடுத்துள்ளது. அதிலும், குறிப்பாக கடந்த வாரம் வெளியான படங்களில் எந்த படமும் பெரிய வசூலை ஈட்டவில்லை என்று கூறப்படுகிறது.

கவின், ஆண்ட்ரியா நடித்த மாஸ்க் மற்றும் முனிஷ்காந்த் நடித்த மிடில் கிளாஸ், யெல்லோ இரவின் விழிகள் தீயவர் குலை நடுங்க, ப்ரண்ட்ஸ் உட்பட ஆறு படங்கள் கடந்த வார வெளியான நிலையில் எந்த படமும் வெற்றி பெறவில்லை என்று கூறப்படுகிறது.

மாஸ்க் மற்றும் மிடில் கிளாஸ் படத்துக்கு விமர்சன ரீதியாக ஓரளவு வரவேற்பு கிடைத்தாலும், வசூலில் சுமாராக இருப்பதால் படக்குழு கவலையில் உள்ளது. இந்த இரண்டு படங்கள் தவிர மற்ற நான்கு படங்கள் தோல்வி அடைந்துள்ளன. மாஸ்க் மற்றும் மிடில் கிளாஸ் படங்களின் டிஜிட்டல், சேட்டிலைட் ஏரியா உரிமை விற்கப்பட்டுள்ளதால் தயாரிப்பாளர் மட்டும் ஓரளவு தப்பிக்க வாய்ப்புள்ளது.

இந்த வாரமும் கீர்த்தி சுரேஷ் நடித்த ரிவால்வார் ரீட்டா உட்பட ஐந்துக்கும் அதிகமான படங்கள் வருகின்றன. இதில் எந்த படம் ஓடுமோ என்று தமிழ் சினிமாகாரர்கள் சோகத்தில் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !