உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விஜய்யை மீண்டும் புகழ்ந்த ஷாரூக்கான்

விஜய்யை மீண்டும் புகழ்ந்த ஷாரூக்கான்

பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஷாரூக்கான் நேற்று ரசிகர்களுடன் டுவிட்டரில் 'சாட்' செய்தார். அப்போது பல்வேறு விதமான கேள்விகளை ரசிகர்கள் அவரிடம் கேட்டனர். ஒரு ரசிகர், 'விஜய்யைப் பற்றிச் சொல்லுங்கள்,” என்று கேட்டதற்கு “அவர் மிகவும் இனிமையானவர், அமைதியானவர். எனக்கு அன்பான டின்னரையும் அளித்தார்,” என்று புகழ்ந்து பதிலளித்துள்ளார்.

இதற்கு முன்பு கடந்த நவம்பர் மாதம் ரசிகர்களுடன் 'சாட்' செய்த போதும் விஜய் பற்றிய ரசிகர் ஒருவரின் கேள்விக்கு, “விஜய் மிகவும் கூல் ஆன மனிதர்” என்று பாராட்டியிருந்தார்.

விஜய்யின் ஆஸ்தான இயக்குனரான அட்லீ இயக்கத்தில் ஷாரூக்கான் தற்போது நடித்து வரும் 'ஜவான்' படத்தில் விஜய் சிறப்புத் தோற்றத்தில் நடிப்பாரா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !