நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் வெளியிட்ட மறுப்பு செய்தி!
ADDED : 1002 days ago
ஆரோகணம், அம்மணி, ஹவுஸ் ஓனர் என பல படங்களை இயக்கியவர் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன். தற்போது அவர், ‛ஆர் யூ ஓகே பேபி' என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த நிலையில் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் பா.ஜ.,வில் இருந்து விலகி விட்டதாக சோசியல் மீடியாவில் ஒரு செய்தி வெளியாகி வருகிறது. இது குறித்து அவர் உடனடியாக தனது மறுப்பு செய்தி வெளியிட்டு இருக்கிறார்.
அதில், ‛நான் பா.ஜ.,வில் இதுவரை இணையவில்லை. அப்படி இருக்கும்போது எப்படி நான் வெளியே வர முடியும். செய்திகளை உண்மைக்கு புறம்பாக திரித்து தவறாக வெளியிடுவது தான் இன்றைய பத்திரிகைகளின் தரமாக உள்ளது. பா.ஜ., தலைவர் அண்ணாமலை செய்வது சரிதான். இன்றைய ஊடகங்கள் ஒழுக்கத்தை வளர்த்துக் கொள்ளாத வரை மற்றவர்களை கேள்வி கேட்கும் தகுதி அவர்களுக்கு இல்லை' என்று அந்த பதிவில் தெரிவித்து இருக்கிறார் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன்.