எகிப்து நாட்டுக்கு கணவருடன் ஜாலி டூர் அடித்த ஹன்சிகா
ADDED : 1008 days ago
ஹன்சிகா மோத்வானிக்கும், அவரது காதலர் சோஹைல் கதூரியா என்பவருக்கும் கடந்த டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. ஜெய்பூரில் உள்ள 450 ஆண்டுகள் பழமை வாய்ந்த முண்டோட்டா அரண்மனையில் அவர்கள் திருமணம் நடைபெற்றது. அதையடுத்து தனது கணவருடன் வெளிநாடுகளுக்கு ஹனிமூன் சென்றிருக்கிறார் ஹன்சிகா. முதலில் ஜெர்மனி, பாரீஸ் போன்ற நாடுகளுக்கு சென்ற ஹன்சிகா அங்கிருந்தபடியே கிறிஸ்துமஸ் புத்தாண்டு கொண்டாடினார் . தற்போது எகிப்து நாட்டுக்கு சென்றுள்ளார். அங்குள்ள பிரமிடு மற்றும் ஒட்டகங்களின் மேல் அமர்ந்தபடி தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் ஹன்சிகா.