கடவுளுக்கே பெருமை : மாதவன் நெகிழ்ச்சி பதிவு
ADDED : 1111 days ago
இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை கதையை மையமாகக் கொண்டு மாதவன் இயக்கி, தயாரித்து நடித்து கடந்த ஜூலை மாதம் வெளியான படம் ராக்கெட்ரி. விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கையை தழுவி இந்த படம் எடுக்கப்பட்டது. அவரது வேடத்தில் நடித்து, இயக்கவும் செய்திருந்தார் மாதவன். இந்த படத்தின் மீது பலதரப்பட்ட விமர்சனங்கள் இருந்த போதும் இந்திய சினிமாவில் ஒரு முக்கியமான படமாக மாறியது. அதோடு ஆஸ்கர் விருதுக்கான படங்களின் பட்டியலிலும் ராக்கெட்ரி படமும் இடம் பிடித்துள்ளது. இதையடுத்து நடிகர் மாதவன் தனது இணைய பக்கத்தில் ஒரு பதிவு போட்டிருக்கிறார். அதில், அதிகாரப்பூர்வமாக ஆஸ்கர் 2023 -ராக்கெட்ரி நம்பி எபெக்ட் படம் சார்ட்லிஸ்ட் ஆகியுள்ளது. இது கடவுளுக்கே பெருமை. பார்ப்போம் என்று பதிவிட்டுள்ளார்.