மாரி செல்வராஜின் ‛வாழை' படப்பிடிப்பு நிறைவு
ADDED : 1054 days ago
கர்ணன் படத்தை அடுத்து உதயநிதியை வைத்து ‛மாமன்னன்' படத்தை இயக்கி உள்ளார் மாரி செல்வராஜ். கீர்த்தி சுரேஷ், வடிவேலு, பஹத் பாசில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ் தொடர்பான வேலைகள் நடக்கின்றன. இந்நிலையில் கடந்த நவம்பரில் ‛வாழை' என்ற படத்தை ஆரம்பித்தார். கலை, நிகிலா விமல் நடிக்கும் இந்த படத்தை அவரே இயக்கி, தயாரிக்கிறார். கிட்டத்தட்ட 50 நாட்களுக்கு உள்ளேயே இதன் படப்பிடிப்பை முடித்துவிட்டார். தற்போது படப்பிடிப்பு நிறைவடைந்ததை படக்குழுவினர் மாரி செல்வராஜ் உடன் கேக் வெட்டி கொண்டாடினர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.