தடையை மீறி வெளியான ‛வாரிசு, துணிவு' படங்கள் - படக்குழு அதிர்ச்சி
ADDED : 1114 days ago
பொங்கலை முன்னிட்டு, விஜய் நடித்த வாரிசு, அஜித் நடித்த துணிவு படங்கள் இன்று(ஜன., 11) வெளியாகின. இருதரப்பு ரசிகர்களின் ஆட்டம் பாட்டத்துடன் நள்ளிரவு காட்சி, அதிகாலை காட்சி என திரையிடப்பட்டன. சில இடங்களில் சிறு சிறு மோதல்கள் நடந்தன. குறிப்பாக சென்னையில் ஒரு தியேட்டரில் மோதல் வெடித்தது. இளைஞர் ஒருவர் லாரியில் இருந்து கீழே தவறி விழுந்ததில் உயிரிழந்தார்.
இந்நிலையில் இந்த இரண்டு படங்களையும் இணையதளங்களில் வெளியிட நீதிமன்றம் தடை விதித்து இருந்தது. ஆனால் அதையும் மீறி தமிழகத்தில் தியேட்டரில் படம் வெளியான சில மணி நேரத்தில், இணையதளங்களில் இரண்டு படங்களும் வெளியாகி படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.