உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சாந்தனுவை காப்பாற்றுமா ‛இராவண கோட்டம்'

சாந்தனுவை காப்பாற்றுமா ‛இராவண கோட்டம்'

கே.பாக்யராஜின் மகன் சாந்தனு. சக்கரகட்டி படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு சித்து பிளஸ் 2, கண்டேன், ஆயிரம் விளக்கு, வாய்மை, முருங்கைக்காய் சிப்ஸ் உள்பட பல படங்களில் நடித்தார். ஆனாலும் சாந்தனுவால் ஒரு ஹீரோவாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முடியவில்லை.

நீண்ட இடைவெளிக்கு பிறகு அவர் கதையின் நாயகனாக நடித்து உருவாகி உள்ள படம் இராவண கோட்டம். கண்ணன் ரவி தயாரிக்கிறார். கயல் ஆனந்தி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, மதயானைக் கூட்டம் புகழ் விக்ரம் சுகுமாறன் இந்தப் படத்தை இயக்குகிறார். பிரபு, இளவரசு, தேனப்பன், தீபா சங்கர், அருள்தாஸ் மற்றும் பலர் நடிக்கின்றனர். ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைக்கிறார்.

படம் பற்றி இயக்குன் விக்ரம் சுகுமாறன் கூறியதாவது: மதயானை கூட்டம் போன்றே இந்த படமும் ஒரு முக்கியமான சமூக பிரச்சினை பற்றி பேசுகிறது. சாந்தனுவுக்கு இது முக்கியமான படமாக இருக்கும் என்றார்.

ஒரே ஒரு வெற்றிக்காக காத்திருக்கும் சாந்தனுக்கு இந்த படம் வெற்றிப் படமாக அமையுமா என்பது இந்த ஆண்டின் துவக்கத்தில் தெரிய வரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !