ஐஸ்வர்யா ரஜினி படிக்கும் 'தி சீக்ரெட்' புத்தகம்
ADDED : 1060 days ago
ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினி, 3, வை ராஜா வை போன்ற படங்களை தொடர்ந்து தற்போது லால் சலாம் படத்தை இயக்கப் போகிறார். விஷ்ணு விஷால் ,விக்ராந்த் நடிக்கும் இந்த படத்தில் ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடிக்க, ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இப்படத்திற்கான பாடல் ரெக்கார்டிங் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது புகைப்படத்துடன் கூடிய ஒரு பதிவு போட்டு இருக்கிறார் ஐஸ்வர்யா ரஜினி. அந்த பதிவில், சிறு வயதில் இருந்தே தனக்கு புத்தகம் படிக்கும் பழக்கம் இருப்பதாக தெரிவித்திருப்பவர், இந்த ஆண்டில் தி சீக்ரெட் என்ற புத்தகத்தை முதன்முதலாக படித்து வருகிறேன் என்று தெரிவித்திருக்கிறார். அதோடு தான் புத்தகம் படிக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டு இருக்கிறார்.