பிரபாஸின் ஆதிபுருஷ் படம் ஜூன் 16ம் தேதி ரிலீஸ்
ADDED : 1037 days ago
ராதேஷ்யாம் படத்தை அடுத்து ஆதிபுருஷ், சலார் உட்பட சில படங்களில் நடித்து வருகிறார் பிரபாஸ். இதில் ஓம் ரவுத் இயக்கத்தில் அவர் நடித்து வரும் ஆதிபுருஷ் படம் ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்ட கதையில் உருவாகி வருகிறது. இந்த படத்தில் பிரபாஸ் ராமனாகவும், கிருத்தி சலோன் சீதையாகவும், சையூப் அலிகான் லிங்கேஸ்வரனாகவும் நடிக்கிறார்கள்.
இந்த படத்தின் டீசர் ஏற்கனவே வெளியான நிலையில் தற்போது ஆதிபுருஷ் படம் 2023ம் ஆண்டு ஜூன் மாதம் 16ம் தேதி திரைக்கு வருவதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. அந்த வகையில் இப்படம் திரைக்கு வருவதற்கு இன்னும் 150 நாட்கள் உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.