மேலும் ஒரு சர்வதேச விருதை வென்ற ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர்
ADDED : 991 days ago
ராம்சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியாபட், சமுத்திரக்கனி உள்பட பலரது நடிப்பில் ராஜமவுலி இயக்கி வெளியான படம் ஆர்ஆர்ஆர். கீரவாணி இசையில் உருவான இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதை அடுத்து பல்வேறு சர்வதேச விருதுகளை வென்று வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் ஆஸ்கர் விருது விழாவில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள நாட்டு நாட்டு என்ற பாடலுக்கு கோல்டன் குளோபல் விருது வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து தற்போது சியாட்டில் பிலிம் கிரிடிக்ஸ் சொசைட்டி இந்த ஆர்ஆர்ஆர் படத்திற்கு சிறந்த நடனத்திற்காக விருது வழங்கியிருக்கிறது. இதை ஆர்ஆர்ஆர் படக்குழு தங்களுக்கு கிடைத்த இன்னொரு புதிய அங்கீகாரமாக கருதுகிறது. ஏற்கனவே இப்படம் சிறந்த பாடல், சிறந்த இயக்குனர் உள்பட பல்வேறு சர்வதேச பிரிவுகளில் விருதுகளை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.