மேலும் செய்திகள்
செப்டம்பர் 12ல் நெட்பிளிக்சில் வெளியாகும் சாயாரா!
962 days ago
கென் கருணாஸ் படத்தில் மூன்று நாயகிகள்!
962 days ago
சமீபத்தில் வெளியான துணிவு படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்திருந்தார் மஞ்சு வாரியர். இந்த படத்தின் படப்பிடிப்பு காஷ்மீர் பகுதியில் நடைபெற்ற போது அஜித் உள்ளிட்ட குழுவினருடன் இணைந்து கிட்டத்தட்ட 1000 கிலோ மீட்டருக்கு மேல் சுற்றுப்பயணம் செய்தார் மஞ்சு வாரியர். இந்த பயண அனுபவம் குறித்து அவர் கூறும்போது விரைவில் தான் ஓட்டுனர் உரிமம் பெற்று விடுவேன் என்றும், அடுத்த முறை தானே பைக் ஓட்டி செல்வேன் என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில் தற்போது அவருக்கு இரு சக்கர வாகன ஓட்டுனர் உரிமம் கிடைத்துள்ளது. இந்த விஷயத்தை அப்படியே மஞ்சு வாரியர் நடித்துவரும் படம் ஒன்றிற்கு புரமோஷனாக பயன்படுத்தியுள்ளனர் படக்குழுவினர்.
மலையாளத்தில் தற்போது வெள்ளரிப்பட்டணம் என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். ஒரு கிராம பஞ்சாயத்தின் வார்டு மெம்பராக கே.பி.சுனந்தா என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் மஞ்சு. படத்தில் அவர் இருசக்கர வாகன ஓட்டுனர் உரிமம் பெற ரொம்பவே போராடுவதாகவும் அதைப்பெற்று தருவதற்காக அவர் தனது குருவுக்கு அவ்வப்போது 500 ரூபாய் தண்டம் அழுவதாகவும் காமெடியாக காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளன.
இதனை குறிப்பிட்டு கே.பி சுனந்தா கதாபாத்திரம் மஞ்சுவாரியருக்கு, “நீங்கள் இரு சக்கர வாகனம் ஓட்டுநர் உரிமம் பெற்றதற்கு என்னுடைய வாழ்த்துக்கள்.. நான்தான் இங்கே ஓட்டுனர் உரிமம் பெற போராடிக்கொண்டு இருக்கிறேன். விரைவில் நானும் ஓட்டுனர் உரிமம் பெற்று விடுவேன். முடிந்தால் ஒரு முறை எங்களது கிராமத்து பக்கம் வந்து செல்லவும். உங்களை பார்க்க அனைவரும் ஆவலாக இருக்கிறார்கள். தற்போது நான் ஒரு வேலையாக இருப்பதால் உங்களுடன் பிறகு பேசுகிறேன்” என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
நிஜத்தில் மஞ்சுவாரியருக்கு இரு சக்கர வாகனம் ஓட்டுநர் உரிமம் எடுக்க வேண்டிய தேவை, அவர் நடித்து வரும் படத்திலும் இருப்பதால் இதை அழகாக படத்தின் பிரமோஷனுக்கு பயன்படுத்தி கொண்டுள்ளார்கள்.
962 days ago
962 days ago