மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் தமன்னா : ரஜினி படம் மூலம் ரீ-என்ட்ரி
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருந்தவர் தமன்னா. 2006ல் வெளிவந்த 'கேடி' படம் மூலம் தமிழில் அறிமுகமானார். ஆனால், 'கல்லூரி' படம்தான் அவருக்கு ஒரு சரியான அடையாளத்தைக் கொடுத்தது. தொடர்ந்து ''படிக்காதவன், அயன், கண்டேன் காதலை, பையா, சிறுத்தை, வீரம், பாகுபலி, தோழா, தர்மதுரை, தேவி,” உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் நடிக்க வந்தாலும் ரஜினிகாந்த் படம் மூலம் ரீ-என்ட்ரி ஆகும் வாய்ப்பு தமன்னாவுக்குக் கிடைத்துள்ளது.