பொன்னியின் செல்வன் 2 டீசர் எப்போது?
ADDED : 989 days ago
மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, பிரகாஷ்ராஜ், சரத்குமார், பார்த்திபன் உட்பட பலரது நடிப்பில் உருவான பிரமாண்ட படம் பொன்னியின் செல்வன். இந்தப் படத்தின் முதல் பாகம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், இரண்டாம் பாகம் வருகிற ஏப்ரல் 28ம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஏப்ரல் மாதம் தொடங்க இருக்கும் இப்படத்தின் பிரமோசன் நிகழ்ச்சிகளில் படத்தில் நடித்துள்ள அனைத்து நடிகர், நடிகைகளும் கலந்து கொள்கிறார்கள். இந்த நிலையில் பொன்னியின் செல்வன் -2 படத்தின் டீசரை மார்ச் மாதம் 1ம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். மேலும் இப்படத்திற்கு பின்னணி இசை அமைக்கும் பணிகளில் தற்போது ஏ.ஆர்.ரஹ்மான் தீவிரமடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.