உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தமிழில் தடம் பதிக்கும் பசில் ஜோசப்

தமிழில் தடம் பதிக்கும் பசில் ஜோசப்

மலையாள சினிமாவின் முன்னணி இயக்குனர் மற்றும் நடிகர் பசில் ஜோசப். 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளர். 'மின்னல் முரளி' உள்ளிட்ட 3 படங்களை இயக்கி உள்ளார். தமிழில் சமீபத்தில் வெளியான 'பராசக்தி' படத்தில் சிறப்பு தோற்றதல்தில் நடித்துள்ளார். தற்போது நேரடியாக தமிழுக்கு வருகிறார்.

தயாரிப்பாளர் லலித் குமாரின் மகன் 'சிறை' அக்ஷய் குமார் நடிக்கும் படத்தின் பூஜை சமீபத்தில் நடந்தது. தற்போது படத்தின் தலைப்பை 'ராவடி' என்று அறிவித்து அதில் பஸில் ஜோசப் மற்றொரு நாயகனான நடிப்பதையும் தயாரிப்பு தரப்பு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த படம் தமிழ், மலையாள மொழிகளில் தயராகிறது.

அறிமுக இயக்குநர் விக்னேஷ் வடிவேல் இயக்குகிறார். இதில் ஜான் விஜய், சத்யன், ஜாபர் சாதிக், நோபல் ஜேம்ஸ், அருணாச்சலேஸ்வரன் , ஷாரீக் ஹாஸன், நடிகை ஐஸ்வர்யா சர்மா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். லியோன் பிரிட்டோ ஒளிப்பதிவு செய்ய, ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !