மூன்றாவது முறையாக கூட்டணி
ADDED : 990 days ago
கட்டா குஸ்தி படத்தை அடுத்து விஷ்ணு விஷால் நடிப்பில் மோகன்தாஸ் படம் வெளியாக உள்ளது. இதுதவிர ஆர்யன், லால் சலாம் படங்களில் நடிக்கிறார். இதையடுத்து எப்ஐஆர் 2 படத்திலும் நடிக்க உள்ளார். இந்நிலையில் இவரை வைத்து ‛முண்டாசுப்பட்டி, ராட்சசன்' என இரண்டு ஹிட் படங்களை தந்த இயக்குனர் ராம்குமார் உடன் மூன்றாவது முறையாக கூட்டணி அமைக்கிறார். விஷ்ணு விஷாலின் 21வது படமாக உருவாகும் இதை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. இது ராட்சசன் படத்தின் இரண்டாம் பாகமா அல்லது வேறு ஒரு படமா என்பது விரைவில் அறிவிப்பு வெளியாகும்.