மோகன்லால் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கும் கமல்ஹாசன் - ஜீவா
ADDED : 987 days ago
மலையாள நடிகர் மோகன்லால் தற்போது 'மலைக்கோட்டை வாலிபன்' என்ற படத்தில் நடித்து வருகிறார். லிஜோ ஜோஸ் என்பவர் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ராஜஸ்தானில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் கமல்ஹாசனும், ஜீவாவும் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாகவும், அவர்கள் நடிக்கும் காட்சிகள் விரைவில் படமாக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே கமல் நடித்த உன்னைப்போல் ஒருவன் படத்தில் நடித்த மோகன்லால் அடுத்தபடியாக மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் 234வது படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதேபோல் விஜய்யுடன் இணைந்து மோகன்லால் நடித்த ஜில்லா படத்தில் நடிகர் ஜீவா ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.