காதலர் வினய் உடன் பிறந்தநாள் கொண்டாடிய விமலா ராமன்
ADDED : 1033 days ago
உன்னாலே உன்னாலே படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான வினய், அதற்கடுத்து பல படங்களில் நடித்தார். துப்பறிவாளன், டாக்டர் மற்றும் எதற்கும் துணிந்தவன் ஆகிய படங்களில் வில்லனாகவும் நடித்து தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தினார். இவரும், தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்த நடிகை விமலா ராமனுடன் காதலில் இருப்பதாக கடந்த சில ஆண்டுகளாக தகவல்கள் பரவி வந்தன.
இந்நிலையில் விமலா ராமன் தற்போது தனது காதலர் வினய் மற்றும் பெற்றோருடன் தனது 42வது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார். இது சம்மந்தமான புகைப்படங்கள் பகிர்ந்த விமலா ராமன், குடும்பத்தினருடன் பிறந்தநாள் கொண்டாடியதாக குறிப்பிட்டுள்ளார். குடும்பத்தினரில் ஒருத்தராக வினய்யை குறிப்பிட்டதால், அவரது காதலை விமலா ராமன் ஏற்றுக்கொண்டதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.