பிரபாஸ் படத்தில் இணையும் ஹிருத்திக் ரோஷன்!
ADDED : 985 days ago
தற்போது ஆதிபுருஸ், சலார், ப்ராஜெக்ட் கே உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் பிரபாஸ். இந்தப் படங்களை அடுத்து தற்போது ஹிந்தியில் ஷாருக்கான் நடிப்பில் பதான் என்ற படத்தை இயக்கி உள்ள சித்தார்த் ஆனந்த் இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறார் பிரபாஸ். தெலுங்கு, ஹிந்தியில் தயாராகும் இந்த படத்தில் பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்க இருக்கிறார்.
மேலும் தற்போது ஹிந்தியில் ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் பைட்டர் என்ற படத்தை இயக்கி வருகிறார் சித்தார்த் ஆனந்த். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் பிரபாஸ் - ஹிருத்திக் ரோஷன் இணையும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட இருப்பதாக அப்படத்தை தயாரிக்கும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.