இது தீட்டு..., அவுங்க கோயிலுக்கு வரக்கூடாது... என எந்த கடவுளும் சொல்லவில்லை : ஐஸ்வர்யா ராஜேஷ்
மலையாளத்தில் வரவேற்பை பெற்ற ‛தி கிரேட் இந்தியன் கிச்சன்' அதேபெயரில் தமிழில் ரீ-மேக் ஆகி உள்ளது. கண்ணன் இயக்க ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை வேடத்தில் நடித்துள்ளார். அவரது கணவராக ராகுல் நடித்துள்ளார். பிப்., 3ல் இந்த படம் திரைக்கு வர உள்ளது. சென்னையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த ஐஸ்வர்யா ராஜேஷ் பத்திரிக்கையாளர்களுக்கு பதில் அளித்தார்.
சபரிமலை என்று நான் குறிப்பிட்டு சொல்லவில்லை. எந்த கோயிலிலும் எந்த கடவுளும் இப்படி செய்யக்கூடாது, அப்படி செய்யக்கூடாது, இத சாப்பிடனும், சாப்பிடக்கூடாது, இதெல்லாம் தீட்டு என்று சொல்லவில்லை. இது நாம் உருவாக்கியது. இதற்கும், கடவுளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நான் இதுபோன்ற கட்டுப்பாடுகளை ஒருபோதும் நம்புவதில்லை.
இவ்வாறு ஐஸ்வர்யா ராஜேஷ் கூறினார்.