உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பட வெளியீட்டிற்கு முன்பே ஆர்ஜே பாலாஜிக்கு கிடைத்த பரிசு

பட வெளியீட்டிற்கு முன்பே ஆர்ஜே பாலாஜிக்கு கிடைத்த பரிசு

'ரன் பேபி ரன்' படத்திற்குப் பிறகு ஆர்ஜே பாலாஜி கதாநாயகனாக நடித்துள்ள படம் 'சிங்கப்பூர் சலூன்'. கோகுல் இப்படத்தை இயக்கியுள்ளார். சத்யராஜ், லால் மற்றும் பலர் இப்படத்தில் நடிக்கிறார்கள். இப்படத்தைப் பார்த்த படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், படத்தின் கதாநாயகன் ஆர்ஜே பாலாஜிக்கு மோதிரம் ஒன்றைப் பரிசாக அளித்துள்ளார். இன்று நடைபெற்ற 'ரன் பேபி ரன்' படத்தின் நன்றி தெரிவிக்கும் பத்திரிகையாளர் சந்திப்பில் இதை பாலாஜி தெரிவித்தார்.

ஆர்ஜே பாலாஜி கதாநாயகனாக நடித்த 'எல்கேஜி, மூக்குத்தி அம்மன்' ஆகிய படங்களுக்குப் பிறகு 'சிங்கப்பூர் சலூன்' படத்தையும் ஐசரி கணேஷ் தான் தயாரிக்கிறார். இப்படம் இந்த ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியாக உள்ளது.

'ரன் பேபி ரன்' படத்தின் தயாரிப்பாளர் எந்த பரிசும் தரவில்லையா என்று கேட்டதற்கு மீண்டும் அவரது தயாரிப்பில் நடிக்க எனக்காகக் கதை கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதுவே பெரிய பரிசுதானே என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !