மீண்டும் தமிழுக்கு வருகிறார் பாவனா
ADDED : 973 days ago
மலையாள நடிகையான பாவனா, தமிழில் சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு வெயில், தீபாவளி, கூடல்நகர், ஆர்யா, ராமேஸ்வரம், ஜெயம் கொண்டான், அசல் உள்பட பல படங்களில் நடித்தார். 20க்கும் மேற்பட்ட மலையாள படங்களில் நடித்தார். கன்னட படங்களிலும் நடித்தார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் நிகழ்ந்த ஒரு பிரச்னையால் சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்ட பாவனா, தற்போது மலையாள படங்களில் நடிக்க தொடங்கி விட்டார். அதோடு தமிழுக்கும் வருகிறார்.
இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் அவர் கணேஷ் வெங்கட்ராம் ஜோடியாக நடிக்கிறார், ஜெய்தேவ் என்ற புதுமுகம் இயக்குகிறார். ஹாரர் த்ரில்லர் ஜார்னரில் இந்த படம் தயாராகிறது. தற்போது இதன் படப்பிடிப்பு கொடைக்கானலில் நடக்கிறது. கணேஷ் வெங்கட்ராம், பாவனா தொடர்பான காட்சிகள் படமாகி வருகிறது.