மலையாள இயக்குனருக்கு மீண்டும் வாய்ப்பளித்த தமிழ் தயாரிப்பாளர்
ADDED : 972 days ago
மலையாள இயக்குனர் ஜியென் கிருஷ்ணகுமார் இயக்கி இருந்த படம் ரன் பேபி ரன். சமீபத்தில் வெளியான இந்த படம் ஓரளவிற்கு வரவேற்பை பெற்றுள்ளது. இதில் ஆர்.ஜே.பாலாஜி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்தனர். பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் லக்ஷ்மண் குமார் தயாரித்திருந்தார். இந்த படத்தில் உழைத்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. அப்போது பிரின்ஸ் பிக்சர்ஸ் ஜியென் கிருஷ்ணகுமாருக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்படும் என்று தயாரிப்பாளர் லக்ஷ்மண்குமார் அறிவித்தார்.
இந்த அறிவிப்பு தற்போது அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இதிலும் ஆர்ஜே பாலாஜிதான் நடிப்பார் என்று தெரிகிறது. மற்ற விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. இது தவிர இயக்குனர் மனு ஆனந்த், ஆண்ட்ரூ லூயிஸ் ஆகியோர் இயக்கும் படங்களையும் தயாரிக்க இருப்பதாக பிரின்ஸ் பிச்சர்ஸ் அறிவித்துள்ளது.