சூர்யா 42வது படத்தில் நடிக்க ஆசையா? ஸ்டுடியோ கிரீன் பட நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு!!
தற்போது சிறுத்தை சிவா இயக்கும் தனது 42வது படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் சூர்யா. அவருக்கு ஜோடியாக திஷா பதானி நடிக்கும் இந்த படம் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சரித்திர கதையில் உருவாகி வருகிறது. இந்நிலையில் தற்போது ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தங்களது டுவிட்டர் பக்கத்தில் ஒரு அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.
அதில், சூர்யா 42வது படத்தில் நடிப்பதற்கு பாடி பில்டர்ஸ் போல் நல்ல உடல் கட்டுடன் நீண்ட தாடி மற்றும் மீசை கொண்ட 25 முதல் 55 வயதுக்கு உட்பட்ட நபர்கள் தங்களது புகைப்படங்களுடன் நடிப்பு திறமை வெளிப்படுத்தும் வீடியோக்களை தங்களுக்கு அனுப்புமாறு தெரிவித்துள்ளது. அத்துடன் மெயில் ஐடி ஒன்றையும் பதிவிட்டுள்ளார்கள்.
இப்படி ஒரு தகவலை சூர்யா 42வது படக் குழு வெளியிட்டதை அடுத்து சூர்யாவுடன் நடிக்கும் ஆர்வத்தில் இருக்கும் நபர்கள் தங்களது புகைப்படம், வீடியோக்களை அவர்கள் குறிப்பிட்ட அந்த மெயில் விண்ணப்பித்து வருகிறார்கள்.