உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நெல்சன் திலீப் குமார் இயக்கிய கோலமாவு கோகிலா, டாக்டர் மற்றும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் உள்பட பல படங்களில் நடித்தவர் ரெடின் கிங்ஸ்லி. தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் தயாரிப்பாளர் மணிகண்டன் என்பவர் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் ரெடின் கிங்ஸ்லி மீது ஒரு புகார் அளித்திருக்கிறார்.

அந்த புகாரில், நடிகர் ரெடின் கிங்ஸ்லியால் எங்கள் நிறுவனத்திற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. லெக்பீஸ் என்ற படத்தில் நடிக்க 10 நாட்கள் கால்சீட் கொடுத்துவிட்டு நான்கு நாட்கள் மட்டுமே அவர் நடித்துள்ளார். அவரால் தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் அந்த தொகையை அவரிடம் இருந்து மீட்டு தருமாறும், அதுவரை அவர் படங்களில் நடிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து ரெடின் கிங்ஸ்லியிடம் தயாரிப்பாளர் சங்கம், என்ன நடந்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !