இனி நான் சிங்கிள் இல்லை - காளிதாஸ் ஜெயராம்
ADDED : 960 days ago
நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ். மீன் குழம்பும் மண்பானையும், ஒரு பக்க கதை, விக்ரம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து சில படங்களில் நடிக்க கமிட்டாகி உள்ளார். இந்நிலையில் இவர் மாடல் அழகி தாரணி காளிங்கராயர் என்பவரை காதலிக்கிறார். இவர்கள் இருவரும் நெருக்கமாக இருந்த போட்டோக்கள் ஏற்கனவே வெளியாகின. இந்நிலையில் காதலர் தினமான இன்று தங்களது காதலை உறுதி செய்து ‛‛இனி நான் சிங்கிள் இல்லை'' என அவருடன் இருக்கும் போட்டோவை பதிவிட்டு குறிப்பிட்டுள்ளார் காளிதாஸ். இதையடுத்து ஏராளமானபேர் காளிதாஸ் - தாரணிக்கு வாழ்த்துகளை பகிர்ந்துள்ளனர்.