காமெடி நடிகர் மயில்சாமி காலமானார் : திரையுலகம் அதிர்ச்சி
சென்னை : காமெடி நடிகர் மயில்சாமி(57) சென்னையில் காலமனார். நேற்று இரவு சென்னை, கேளம்பாக்கத்தில் உள்ள சிவன் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு வீடு திரும்பியபோது மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று(பிப்., 19) அதிகாலை 3:30 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது. இந்த தகவலை மயில்சாமியின் மகன் அன்பு மயில்சாமி உறுதிப்படுத்தி உள்ளார்.
ஏற்கனவே இதய அறுவை சிகிச்சை பெற்றுள்ள இவருக்கு கடந்த டிசம்பரில் மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார். இந்நிலையில் இவரின் திடீர் மறைவு திரையுலகினர், ரசிகர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.