கான் திரைப்பட விழாவுக்கு செல்லும் தமிழ் படம்
ADDED : 1005 days ago
'நட்சத்திரம் நகர்கிறது படத்தில் நடித்த பிரெஞ்சு நடிகை மனிசா டெய்ட் நடித்துள்ள படம் எ ஹோம் அவே பிரம் ஹோம். இந்த படத்தை 'உனக்குள் நான்', 'லைட்மேன்' படங்களை இயக்கிய வெங்கடேஷ் குமார் இப்போது இயக்கியுள்ளார். அனீஷ், நிழல்கள் ரவி, ஸ்ரீ ரஞ்சனி முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். கதையை உமா பாலு எழுதியுள்ளார். சஹாரா ஏஷியா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. எழில் துரை இசை அமைத்துள்ளார்.
ஜெர்மனியைச் சேர்ந்த கரோலின் என்ற ஆராய்ச்சியாளர் தமிழ்நாட்டுக்கு வருகிறார். அவருக்கு ஆதிவாசி இளைஞனுடன் காதல் ஏற்படுகிறது. அதனால் அவர் வாழ்வில் ஏற்படும் திருப்பங்களைப் படம் சொல்கிறது. நார்வே பட விழாவில் இந்தப்படம் 4 விருதுகளை வென்றுள்ளது. கான் திரைப்பட விழாவுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.