மேலும் செய்திகள்
‛இட்லி கடை' படத்தில் அஸ்வின் ஆக அருண் விஜய்!
926 days ago
ரவி அரசிடம் விஷால் வைத்த கோரிக்கை!
926 days ago
த்ரிவிக்ரம், வெங்கடேஷ் படத்தில் இணையும் இளம் நாயகி!
926 days ago
பாடகர் மனோலார்க் ஸ்டுடியோஸ் சார்பில் கே. குமார் தயாரிப்பில், மிர்ச்சி சிவா கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் 'சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்'. இன்று வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஷா பி. என். இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தில் மிர்ச்சி சிவாவுடன் மேகா ஆகாஷ், அஞ்சு குரியன், மாகாபா ஆனந்த், ஷா ரா, திவ்யா கணேஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். பாடகர் மனோ பல வருடங்களுக்கு பிறகு நடித்துள்ளார்.
1992ம் ஆண்டு கமல் நடித்த 'சிங்காரவேலன்' படத்தில் நடிகராக அறிமுகமான மனோ, அதன்பிறகு பொறந்த வீடா புகுந்த வீடா உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். அதன்பிறகு நடிக்கவில்லை. தற்போது இந்த படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: இசையில் பிசியாக இருந்த என்னை கமல் சார் என் மீதுள்ள அன்பின் காரணமாக சிங்காரவேலன் படத்தில் அறிமுகப்படுத்தினார். ஊட்டியில் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நேரம் கிடைக்கும்போது பாடல்களை பாடி வந்தேன். பாடகர், நடிகர் என்று எனது பயணத்தை தொடர நினைத்தபோது இளையராஜா சார் அழைத்து நடிப்பதாக இருந்தால் அதில் தீவிரம் காட்டு, பாடுவதாக இருந்தால் அதில் தீவிரம் காட்டு. உனக்காக எந்த பாடலும் காத்திருக்காது என்றார். அவரது கருத்தை அப்படியே ஏற்று பாடுவதில் கவனம் செலுத்தினேன். இடைவெளி கிடைத்தபோது சில படங்களில் நடித்தேன். பிறகு அதையும் நிறுத்தி விட்டேன்.
இப்போது இந்த படத்தின் இயக்குனர் சொன்ன கதை எனக்கு பிடித்திருந்தது. முதலில் நடிக்க மறுத்து விட்டேன். பிறகு இயக்குனர் தொடர்ந்து வலியுறுத்தினார். அறிமுக இயக்குனர், இளைஞராக இருக்கிறார். அவரை ஊக்கப்படுத்த வேண்டும் என்பதற்காக நடிக்க முடிவெடுத்தேன். இப்போது திரைப்பட படங்களில் பாடுவதை விட மேடை கச்சேரிகளில்தான் அதிக ஆர்வம் காட்டுகிறேன். இந்த படத்தின் மூலம் ரசிகர் என்னை மீண்டும் ஏற்றுக் கொண்டால் தொடர்ந்து நடிப்பது பற்றி முடிவு செய்வேன். என்றார்.
926 days ago
926 days ago
926 days ago