சைரன் படத்தில் வித்தியாசமான கெட்டப்பில் ஜெயம் ரவி
ADDED : 957 days ago
அகிலன் படத்தில் நடித்துள்ள ஜெயம் ரவி அடுத்து ‛சைரன், இறைவன்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் ஆண்டனி பாக்யராஜ் இயக்கும் சைரன் படத்தில் ஒரு கைதி வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் காவல்துறை அதிகாரியாகவும், அனுபமா பரமேஸ்வரன் இன்னொரு நாயகியாக முக்கிய வேடத்திலும் நடிக்கிறார்கள். இப்படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்ட நிலையில், தற்போது இந்த படத்தில் ஜெயம் ரவி வித்தியாசமான தோற்றத்தில் இருக்கும் புகைப்படம் ஒரு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு தற்போது இந்த படத்தில் மாறுபட்ட லுக்கில் அவர் இருக்கும் புகைப்படத்திற்கு ரசிகர்கள் வரவேற்பு கொடுத்து வருகிறார்கள்.