இந்தியன் 2வில் 7 வில்லன்கள்
ADDED : 951 days ago
ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் ‛இந்தியன் 2' படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. இந்நிலையில் இதில் சமுத்திரகனி, பாபி சிம்ஹா, ஜெயப்பிரகாஷ், குரு சோமசுந்தரம், மாரிமுத்து, வெண்ணிலா கிஷோர், சிவாஜி குருவாயூர் ஆகிய 7 பேர் வில்லன்களாக நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை தனுஷ்கோடி அருகே படமாக்க திட்டமிட்டுள்ளனர். முதல்பாகத்தை விட இரண்டாம் பாகம் இன்னும் பிரமாண்டமாகவும், ஆக் ஷன் காட்சிகள் அதிகம் இடம் பெறும் என்றும் கூறப்படுகிறது.