மலையாளத்தில் உருவாகும் 4 மொழிப்படம்
ADDED : 1061 days ago
டோவினோ தாமஸ் மற்றும் குரு சோமசுந்தரம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த 'மின்னல் முரளி' பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தை தயாரித்த தயாரிப்பாளர்கள் மீண்டும் ஒரு அதிரடி ஆக்ஷன் படத்தை தயாரிக்கிறார்கள். இதில் ஆண்டனி வர்க்கீஸ், ஷேன் நிகம் நாயகர்களாக நடிக்கிறார்கள். நீரஜ் மாதவ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்தப் படம் மூலம் நஹாஸ் ஹிதாயத் இயக்குநராக அறிமுகமாகிறார்.
அன்பறிவ் சண்டை இயக்குனர்களாக பணியாற்றும் இந்த படம் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு என அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் பான் சவுத் இண்டியன் படமாக உருவாகி வருகிறது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் படத்தை ஆகஸ்ட் மாதம் வெளியிட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர். படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை.