உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 25 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'விடுதலை' பட டிரைலர்

25 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'விடுதலை' பட டிரைலர்

வெற்றிமாறன் இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில், சூரி கதையின் நாயகனாக நடிக்க, விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உருவாகி வரும் படம் 'விடுதலை'. இப்படத்தின் டிரைலர் கடந்த வாரம் யு டியுபில் வெளியிடப்பட்டது.

இம்மாத இறுதியில் வெளியாக உள்ள இப்படத்தின் டிரைலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இப்போது அந்த டிரைலர் 25 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. இளையராஜா இசையமைத்து வெளிவந்த படங்களில் முதல் முறையாக ஒரு படத்தின் டிரைலர் 25 மில்லியன் பார்வைகளைக் கடப்பது இதுவே முதல் முறை.

சூரி முதல் முறையாக கதாநாயகனாக நடிக்கும் படம், விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் படம், வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவர உள்ள படம், இளையராஜா இசையில் வர உள்ள படம் என இந்தப் படம் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கிறது என்பதை டிரைலருக்குக் கிடைத்துள்ள வரவேற்பு உணர்த்துகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !