விடுதலை படத்தில் 11 இடங்களில் ‛மியூட்'
ADDED : 935 days ago
பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன் போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் வெற்றிமாறன். இவர் தற்போது சூரி, விஜய் சேதுபதி முக்கிய வேடங்களில் நடித்துள்ள விடுதலை படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி உள்ளார். ஜெயமோகன் எழுதிய துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தின் முதல் பாகம் வருகிற மார்ச் 31ம் தேதி திரைக்கு வருகிறது. இளையராஜா இசையமைத்திருக்கிறார். மேலும் இப்படத்திற்கு சென்சார் போர்டு யு/ஏ சான்றிதழ் வழங்கி இருக்கிறது. அதோடு இந்த விடுதலை படத்தில் 11 இடங்களில் கெட்ட வார்த்தைகள் இடம்பெற்று இருந்ததால் அவற்றை சென்சார் போர்டு அதிகாரிகள் மியூட் செய்துள்ளதாகவும், இரண்டு இடங்களில் இடம்பெற்றிருந்த நிர்வாண காட்சிகளிலும் சென்சார் போர்டு கத்திரி போட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.