சல்மான்கான் உடன் நடனம் ஆடிய ராம் சரண்
ADDED : 913 days ago
தமிழில் நடிகர் அஜித் குமார் நடித்து சூப்பர் ஹிட் ஆன படம் வீரம். இந்த படத்தை தற்போது சல்மான் கான் ஹிந்தியில் 'கிஸி கி பாய் கிஸி கி ஜான் 'என்ற பெயரில் ரீமேக் செய்து கதாநாயகனாக நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை பூஜா ஹெக்டே மற்றும் நடிகர் வெங்கடேஷ் டகுபதி நடிக்கிறார்கள்.
சமீபத்தில் இந்த படத்தில் ஒரு பாடல் காட்சிக்கு ராம் சரண், சல்மான் கான், வெங்கடேஷ் டகுபதி மற்றும் பூஜா ஹெக்டே ஆகியோர் இணைந்து நடனம் ஆடுகிறார் என தகவல் வெளியானது. இன்று என்டம்மா என்ற அந்த பாடலை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர். இந்த பாடலில் சல்மான் கான், ராம் சரண், வெங்கடேஷ் டகுபதி என மூவரும் இணைந்து நடனம் ஆடும் காட்சிகள் உள்ளது. இப்போது ரசிகர்கள் அந்த காட்சிகளை சமூக வலைதளங்களில் மகிழ்ச்சியாக பதிவிட்டு வருகின்றனர்.