உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 2 ஹீரோயின்களுடன் நடிக்கும் காளிதாஸ்

2 ஹீரோயின்களுடன் நடிக்கும் காளிதாஸ்

விக்ரம், நட்சத்திரம் நகர்கிறது படத்திற்கு பிறகு காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் படம் 'அவள் பெயர் ரஜ்னி'. நவரசா பிலிம்ஸ் தயாரிப்பில், வினில் ஸ்கரியா வர்கீஸ் இயக்கி உள்ளார். நமீதா பிரமோத், ரெபா மோனிகா ஜான் மற்றும் சைஜு குருப், அஸ்வின் குமார், கருணாகரன், ஷான் ரோமி ஆகியோர் நடித்துள்ளனர்.

படம் பற்றி இயக்குனர் வினில் கூறியதாவது: தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் உருவாகியுள்ள இப்படம், நொடிக்கு நொடி திருப்பங்களுடன் ரசிகர்களை இருக்கை நுனியில் வைக்கும், துப்பறியும் வகை திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ளது. சென்னை, பொள்ளாச்சி, கொச்சி ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடந்துள்ளது. இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !