5 கோடி மதிப்பில் புதிய ரேஞ்ச் ரோவர் கார் வாங்கிய மோகன்லால்
ADDED : 954 days ago
மலையாளத்தில் நடிகர் மோகன்லால் தற்போது மலைக்கோட்டை வாலிபன் என்கிற படத்தில் நடித்து வருகிறார். வித்தியாசமான படங்களை தொடர்ந்து கொடுத்து வரும் இயக்குனர் லிஜோ ஜோஸ் பெள்ளிசேரி இந்த படத்தை இயக்கி வருகிறார். இன்னொரு பக்கம் சமீபத்தில் மலையாளத்தில் துவங்கப்பட்ட பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் மோகன்லால்.
இந்த நிலையில் தற்போது தனது வீட்டிற்கு ஒரு புதுவரவாக 5 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய ரேஞ்ச் ரோவர் கார் ஒன்றை மோகன்லால் வாங்கியுள்ளார். நடிகர்கள் பிரித்விராஜ், மம்முட்டி ஆகியோரை போல மிகப்பெரிய கார் பிரியவர் இல்லை என்றாலும் அவ்வப்போது தனக்கு பிடித்த காரை வாங்குவதை மோகன்லாலும் வாடிக்கையாக வைத்துள்ளார்.