உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தனுஷ் - மாரி செல்வராஜ் படத்தை பற்றி புதிய தகவல்

தனுஷ் - மாரி செல்வராஜ் படத்தை பற்றி புதிய தகவல்

இயக்குனர் மாரி செல்வராஜ், நடிகர் தனுஷ் கூட்டணியில் கடந்த 2021ம் ஆண்டு வெளியான 'கர்ணன்' படம் நல்ல வரேற்பை பெற்று, வசூலையும் குவித்தது. சிலதினங்களுக்கு முன் மீண்டும் நடிகர் தனுஷூம் மாரிசெல்வராஜூம் இணையும் புதிய படத்திற்கான அறிவிப்பு வெளியானது. இப்படத்தை தனுஷின் உண்டர்பார் நிறுவனத்துடன் இணைந்து ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தயாரிப்பு பணியில் இறங்கி உள்ளார் தனுஷ்.

இந்நிலையில் இந்த படத்தை பற்றிய புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படம் தனுஷின் சினிமா கேரியரில் அதிக பட்ஜெட்டில் உருவாகிற படம் என்கிறார்கள். மேலும் இந்த படத்தில் நடிக்க நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களை மற்ற மொழிகளில் உள்ள சிறந்த வல்லுநர்களை அழைத்து வருவதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு துவங்குகிறதாம். மாரி செல்வராஜிற்கு அலுவலகம் ஒன்றை அமைத்து கொடுத்து படத்தின் பணிகளை பார்க்கும்படி தனுஷ் கூறியுள்ளாராம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !