லோகேஷ் கனகராஜ், அல்லு அர்ஜூன் படத்தில் ஷ்ரத்தா கபூர்?
ADDED : 22 hours ago
தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் புஷ்பா 1, 2 படங்களுக்கு பிறகு பான் இந்தியா நடிகராக மாறியுள்ளார். தற்போது அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் தனது 22வது படத்தில் நடித்து வருகிறார். இது ஒரு சூப்பர் ஹீரோ கதையில் தயாராகிறது. இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் அவரது 23வது படத்தில் நடிக்கவுள்ளார். இதனை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். அனிரூத் இசையமைத்திருக்கிறார். தற்போது இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் உடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்கிறார்கள். ஒருவேளை இவர் நடிப்பது உறுதியானால் லோகேஷ் கனகராஜ் படத்தில் பாலிவுட் நடிகைகள் நடிப்பது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.