இறுகப்பற்று படத்தினால் நடந்த நல்லது : விக்ரம் பிரபு நெகிழ்ச்சி
ADDED : 1 days ago
மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் பேரன் மற்றும் நடிகர் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு. சமீபகாலமாக விக்ரம் பிரபு கதைக்கு முக்கியத்துவம் தந்து படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். இந்த வரிசையில் சமீபத்தில் வெளியான 'சிறை' படத்தை உதாரணமாக கூறலாம். விக்ரம் பிரபு அளித்த ஒரு பேட்டியில் சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் நடித்து வெளியான இறுகப்பற்று படத்தின் மூலம் நடந்த சில சம்பவங்களை குறித்து கூறியதாவது, இறுகப்பற்று படம் திரைக்கு வந்த இரண்டாவது வாரத்தில் திருச்சி நீதிமன்றத்தில் 38 விவாகரத்து வழக்கைத் திரும்ப பெற்றுள்ளார்கள். இந்த படத்தினால் ஒரு 1000 திருமணம் காப்பாற்றப்படும் என நினைத்தோம். ஒரு படத்தின் தாக்கம் நாங்கள் சொல்லாமல் நடந்த போது எங்களுக்கு ரொம்ப பெருமையாக இருந்தது என மனம் நெகிழ்ந்து பகிர்ந்துள்ளார் விக்ரம் பிரபு.