பிப்.,13ல் ‛லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' வெளியாக வாய்ப்பு
ADDED : 1 days ago
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே.சூர்யா, சீமான், கிர்த்தி ஷெட்டி, கவுரி கிஷன் உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'எல்.ஐ.கே' எனப்படும் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க, அனிரூத் இசையமைத்துள்ளார். ஏற்கனவே பலமுறை ரிலீஸ் தேதி தள்ளிப்போன நிலையில் கடைசியாக கடந்தாண்டு டிசம்பர் 18ல் ரிலீஸ் என அறிவித்திருந்தனர். ஆனால் அப்போதும் படம் வெளியாகவில்லை. தற்போது இந்த படத்தை வருகின்ற பிப்ரவரி 13ம் தேதியன்று காதலர் தினத்தை முன்னிட்டு திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். இதற்காக இந்த படத்தை தணிக்கை குழுவினருக்கு படக்குழு அனுப்புகின்றனர். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.