ரீ ரிலீஸ் ஆகும் சூர்யாவின் காக்க காக்க
ADDED : 11 hours ago
கடந்த 2003ம் ஆண்டில் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சூர்யா, ஜோதிகா, ஜீவன் ஆகியோர் இணைந்து நடித்து வெளிவந்த படம் 'காக்க காக்க' . இப்படம் வெளியான காலகட்டத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் ஒலித்தது. குறிப்பாக இந்த படம் வெளியான பிறகு தமிழ் சினிமாவில் போலீஸ் படங்களுக்கு ஒரு நியூ டிரெண்ட் செட்டாக அமைந்தது.
இந்த படத்தின் தயாரிப்பாளர் தாணு ஏற்கனவே சச்சின் படத்தை ரீ ரிலீஸ் செய்து வெற்றி பெற்றார். தொடர்ந்து அவர் தயாரிப்பில் உள்ள சில படங்களை ரீ ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார். தெறி படம் விரைவில் ரீ ரிலீஸாக உள்ளது. இந்த வரிசையில் 23 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் காக்க காக்க படத்தை விரைவில் ரீ ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார். இதற்கான பணிகளை தொடங்கியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.